மைக்ரோசாப்ட் நிறுவனமானது, 'அரிதான' இந்திய மொழிகளை இயங்கலையில் கொண்டு வருவதற்காக வேண்டி, 2015 ஆம் ஆண்டில் ELLORA அல்லது குறைந்த மூல ஆதாரங்கள் கொண்ட மொழிகளைப் புத்துயிர் பெறச் செய்தல் என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், ஆராய்ச்சியாளர்கள் அந்த மொழிகளின் எண்ணிம வளங்களை உருவாக்கி வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ELLORA திட்டமானது கோண்டி, முண்டாரி போன்ற சிறிய மொழிகள் எண்ணிம உலகில் வளம் பெற உதவுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்றுவிக்கச் செய்வதற்கான தரவுத் தொகுப்பை உருவாக்குவதற்காக வேண்டி அச்சிடப்பட்ட இலக்கியங்கள் உள்ளிட்ட மூல ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 20% பேர் எண்ணிம உலகில் ஈடுபடுவதில் தங்கள் மொழியைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.