மைக்ரோசிப் பொருத்தப்பட்ட சிப்பிப் பாறை நாய்கள் – நெல்லை மருத்துவக் கல்லூரி
August 27 , 2019 2241 days 867 0
திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது சிப்பிப் பாறை என்ற நாட்டு நாய் இனங்களின் தரவுத் தளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இது போன்ற 100 நாய்களுக்கு நாட்டிலேயே முதல்முறையாக மைக்ரோசிப்களைப் பொருத்தியுள்ளது.
இந்தியாவின் கென்னல் சங்கத்தின் (Kennel Club of India - KCI) உறுப்பினர்களாக இருக்கும் நாய்களுக்கு மைக்ரோசிப் கட்டாயமானதாகும்.
இது நாட்டில் உள்ள உயரிய நாய் இனங்களுக்கு இணையாக சிப்பிப் பாறை இனத்திற்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
சிப்பிப் பாறை நாயானது வேட்டை நாய் இரத்தத்தின் (கேனைன்) “உலகளாவிய வழங்குநர்” என்ற புகழையும் பெற்றுள்ளது.