மைக்ரோனேசியாவில் கடலுக்கடியில் கம்பி வட இணைப்புத் திட்டம்
June 10 , 2023 805 days 381 0
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் கடலடிக் கம்பி வடத் திட்டத்தில் ஜப்பான் நாடும் இணைந்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலையமைப்புகளை மேம்படுத்தி அதன் மூலம் இது கிழக்கு மைக்ரோனேசியா தீவு நாடுகளை இணைக்கும்.
தோராயமாக 2,250 கிலோமீட்டர் தொலைவிற்கு கடலுக்கு அடியில் செல்லும் இந்த வடமானது மைக்ரோனேஷியாவில் உள்ள கோஸ்ரே என்ற கூட்டாட்சி நாட்டினையும், கிரிபாட்டியில் உள்ள தாராவா மற்றும் நவுருவையும் இணைக்கும்.