மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ அடிப்படையிலான கோவிட்-19 சோதனை
January 23 , 2021 1656 days 704 0
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கோவிட் – 19 நோயாளிகளின் இரத்த மாதிரியில் மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏவை அளவிடுவதற்காக ஒரு புதிய விரைவு கோவிட் – 19 சோதனையை உருவாக்கியுள்ளனர்.
மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ என்பது பொதுவாக செல்களின் ஆற்றல் உற்பத்தியகங்களுக்குள் இருக்கும் ஒரு தனித்துவ மரபணு வகைப் பொருளாகும்.
இந்தச் சோதனையானது அதிக வைரஸ் அபாயத்தைக் கொண்டுள்ள மக்களைக் கண்டறிவதற்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது உடல் செல்களின் உயிரணு ஆற்றல் நுண்ணுறுப்புகளில் அமைந்துள்ளது.
மைட்டோகாண்டிரியா ஆனது உணவில் உள்ள ரசாயன ஆற்றலை அடினோசைன் டிரைபாஸ்பேட்டாக (ATP) மாற்றுகின்றது.
ATP ஆனது தசைச் சுருக்கம் மற்றும் நரம்புத் தூண்டல் பரவல் ஆகியவற்றிற்கான ஆற்றலை வழங்குகின்றது.
மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது தாயிடமிருந்து பெறப் படுகின்றது.
மனிதர்களைத் தவிர்த்து, மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது பாசிகள் மற்றும் பூஞ்சைகளிலும் காணப் படுகின்றது.
மைட்டோகாண்டிரியல் செல்லின் ஆற்றல் மையம் என்றும் அழைக்கப்படுகின்றது.