மொராக்கோவின் 2-வது புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்
November 23 , 2018 2451 days 780 0
மொராக்கோ நாடானது தனது முகமது VI-B என பெயரிடப்பட்ட இரண்டாவது புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இது தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள கவுரோ என்ற நகரத்தில் உள்ள கயானா விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து ஏரியன் ஸ்பேஸ் வேகா ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
இது நவம்பர் 2017-ல் வேகா ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட மொராக்கோவின் முதல் செயற்கைக் கோளான மொகமது 6-A-ன் இரட்டையாக ஒரே சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
புவி கண்காணிப்பிற்கான மொராக்கோவின் இரண்டு செயற்கைக் கோள்கள் தொகுப்பின் ஏவுதலை இது பூர்த்தி செய்துள்ளது.
இந்த செயற்கைக் கோளானது தாலேஸ் அலெனியா விண்வெளி (Thales Alenia Space) மற்றும் வானூர்தி பாதுகாப்பு & விண்வெளி (Airbus Defence & Space) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
ஏரியன் ஸ்பேஸ் 1980-ல் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனமாகும். இது விண்வெளித் துறையில் உலகின் முதல் வணிக ரீதியிலான சேவை வழங்குநர் நிறுவனம் ஆகும்.