மூத்த திராவிடத் தலைவரும், திமுக உயர்மட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினருமான L. கணேசன் சமீபத்தில் காலமானார்.
1989 ஆம் ஆண்டில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இவர் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினார்.
இவர் 1965 ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நபராக இருந்தார்.
இவர் 1967 ஆம் ஆண்டில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பதோடு மேலும் 2004 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவசரநிலையின் போது, அவர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப் பட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் மக்களவை (M.P.), மாநிலங்களவை (M.P.), தமிழ்நாடு சட்டப் பேரவை (M.L.A.) மற்றும் தமிழ்நாடு சட்ட மேலவை (M.L.C.) ஆகியவற்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒரே அரசியல்வாதி இவரே ஆவார்.