TNPSC Thervupettagam

மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகம் - IIT மெட்ராஸ்

November 17 , 2025 3 days 45 0
  • இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை ஆய்வு செய்வதற்காக என மதராஸ் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகத்தை அமைத்துள்ளது.
  • மனிதர்கள் மொழியை எவ்வாறு உணர்கிறார்கள், செயலாக்குகிறார்கள் மற்றும் மேம்படுத்தச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வகம் சோதனை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்துகிறது.
  • சோதனை வழி மொழியியல் மூலம் மொழியை முறையாகப் பகுப்பாய்வு செய்யும் இந்தியாவின் முதல் மையம் இதுவாகும்.
  • பன்மொழி சூழல்களில் மொழியியல் செயலாக்கத்தை ஆராய இந்த ஆய்வகம் கண்களின் செயல்பாடுகளின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் எதிர்வினை ஆற்றுவதற்கான நேர ஆய்வுகள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
  • மொழியியல் ரீதியாக விழிப்புணர்வு மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க இந்த ஆய்வகம் பொறுப்பான செயற்கை நுண்ணறிவிற்கான மையத்துடன் இணைந்து செயல்படுகிறது.
  • இந்திய குழந்தைகளில் இலக்கணம் நிரம்பிய பேச்சு/குரல், கோபுலா கட்டுமானங்கள் மற்றும் டிஸ்லெக்ஸியா (வாசிப்புக் குறைபாடுகள்) ஆய்வுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி இந்திய மொழிகளில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்