TNPSC Thervupettagam
April 10 , 2026 2 days 84 0
  • மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மொஹ்சினா கித்வாய், தனது 94-வது வயதில் நொய்டாவில் காலமானார்.
  • இவர் தொழிலாளர் நலன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1960 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார்.
  • 1978 ஆம் ஆண்டில் ஆசம்கர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதோடு மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
  • இந்தியத் தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான இவர், காங்கிரஸ் செயற்குழு (CWC) மற்றும் மத்திய தேர்தல் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
  • சட்ட மேலவை, சட்டப்பேரவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய நான்கு அவைகளிலும் பணியாற்றிய ஒரு சில தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்