மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது “மோச்சி ஸ்வாபிமான்” என்ற ஒரு முன்னெடுப்பை அறிவித்துள்ளது.
தோல் துறைக்கான திறன் ஆணையமானது (Leather Sector Skill Council - LSSC) ஒருங்கிணைக்கும் நிறுவனமாக செயல்படுகின்றது.
இதன் கீழ், LSSC ஆனது இந்தியாவில் உள்ள தோலை அடிப்படையாகக் கொண்ட காலணிகளைத் தைக்கும் சமூக மக்களின் பணிகளுக்கு உதவ இருக்கின்றது. மேலும் இது பணிபுரிவதற்கான சிறந்த சூழ்நிலைகளை அளிக்க இருக்கின்றது.
LSSC ஆனது பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனாவை (Pradhan Mantri Kaushal Vikas Yojana - PMKVY) ஒருங்கிணைக்கின்றது.
திறன் பயிற்சியை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கானத் திறன் மேம்பாட்டை PMKVY ஊக்குவிக்கின்றது.
இந்தியாவின் தோல் துறையானது உலகளவில் இரண்டாவது பெரிய தோல் ஆடை உற்பத்தியாளர் மற்றும் காலணி உற்பத்தியாளராக விளங்குகின்றது.
உலகளவில் மொத்தத் தோல் உற்பத்தியில் 13% பங்களிப்பை இது கொண்டுள்ளது.
இது இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றது.
LSSC பற்றி
LSSC ஆனது தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இது இந்தியாவில் உள்ள தோல் துறையில் பணியாற்றும் திறமையான பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.