மோதலின் போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 19
June 21 , 2021 1819 days 588 0
மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், உலகம் முழுவதும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கும் அதிலிருந்து தப்பி உயிர் வாழ்பவர்களுக்கும் மரியாதை அளிததல் போன்றவற்றின் அவசியம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இவ்வகையான குற்றங்களை ஒழிப்பதற்காக தைரியத்தோடு எதிர்த்துப் போராடி தனது உயிரையே அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்காகவும் வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு ஜுன் 19 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை அறிவித்தது.