மோதல் நிகழ்வுகளில் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19
June 22 , 2024 394 days 216 0
2015 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆனது இந்நாளை அறிவித்தது.
பாலியல் வன்முறையால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
"மோதல் தொடர்பான பாலியல் வன்முறை" என்ற சொல் ஆனது கற்பழிப்பு, பாலியல் சார்ந்த அடிமைத்தனம், வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், பலவந்த கருத்தரிப்பு, பலவந்த கருக்கலைப்பு, பலவந்த கருத்தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதலுடன் தொடர்புடைய கட்டாயத் திருமணம் ஆகியவற்றைக் குறிக்கிறது.