மோதிஹரி - அம்லேஹ்குன்ஞ் பெட்ரோலியக் குழாய்த் தொடர்
July 19 , 2019 2194 days 769 0
மோதிஹரி - அம்லேஹ்குன்ஞ் பெட்ரோலியக் குழாய்த் தொடர் இந்தியாவினால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளதாக நேபாளத்திற்கான இந்தியத் தூதர் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளின் நிர்வாகத் தலைவர்களால் மெய்நிகர் முறையில் தொடங்கி வைக்கப்பட்ட பின்பு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தத் திட்டத்தின் வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்கும்.
பீகாரின் மோதிஹரியிலிருந்து நேபாளத்தின் அம்லேஹ்குன்ஞ் வரையிலான 69 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பெட்ரோலியக் குழாய்த் தொடரானது இந்தியாவினால் கட்டப்பட்டுள்ளது.
இது நேபாளத்தின் எண்ணெய் சேமிப்புப் பிரச்சினையை எதிர் கொள்வதற்கும் லாரிகளின் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் போக்குவரத்திற்கு முடிவு கட்டுவதற்கும் உதவும்.