TNPSC Thervupettagam
February 12 , 2026 13 hrs 0 min 23 0
  • சந்திரயான்-4 திட்டத்திற்காக சந்திரனில் மோன்ஸ் மவுட்டன் அருகே ஒரு பாதுகாப்பான தரையிறங்கும் தளத்தை இஸ்ரோவின் விண்வெளிப் பயன்பாட்டு மையம் அடையாளம் கண்டுள்ளது.
  • மோன்ஸ் மவுட்டன் என்பது சந்திரனின் தென் துருவத்திலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெரிய, தட்டையான மலையாகும்.
  • இது தென் துருவ – ஐட்கென் (SPA) படுகையின் விளிம்பிற்கு அருகில் அமைந்துள்ளது என்ற நிலையில் இதுவும் மிகப்பெரிய மற்றும் பழமையான மோதலால் உருவான படுகைகளில் ஒன்றாகும்.
  • இந்த மலை 100 கி.மீ அகலம் கொண்டது மற்றும் சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து 6,000 மீ உயரத்தில் கரடுமுரடான பள்ளங்கள் மற்றும் பாறைகளுடன் உயர்கிறது.
  • சில பகுதிகள் கிட்டத்தட்ட தொடர்ச்சியான சூரிய ஒளியைப் பெறுகின்றன என்ற நிலையில் மற்றவை நிரந்தரமாக நிழலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்