ஹவாயில் உள்ள மௌனா லோவா பருவநிலை ஆய்வகத்திற்கு நிதியளிப்பதை நிறுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் விளைவாக உலகின் மிகவும் நீண்ட காலமாக இயங்கும் கார்பன் டை ஆக்சைடு கண்காணிப்பு நிலையங்களில் ஒன்று 65 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட உள்ளது.
மௌனா லோவா நிலையம் ஆனது 1958 ஆம் ஆண்டு அறிவியலாளர் சார்லஸ் கீலிங் என்பவரால் நிறுவப்பட்டது.
வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு (CO₂) பற்றிய நிலையான தரவை வழங்கிய இது "கீலிங் வளைவை" உருவாக்கியது.
இந்த ஆய்வகத்தின் உயரமான மற்றும் தொலைதூர அமைவிடமானது CO₂ அளவைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவுவதோடு, மனிதனால் இயக்கப்படும் பருவநிலை மாற்றத்தை உறுதிப்படுத்த உதவியது.