யனோமாமி ஷாமன் டேவி கோபனேவா – சிறந்த வாழ்வாதார விருது
December 9 , 2019 2059 days 721 0
“மழைக்காடுகளின் தலாய் லாமா” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற யனோமாமி ஷாமன் டேவி கோபெனாவா என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் சிறந்த வாழ்வாதார விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது “மாற்று நோபல் பரிசு” என்று அழைக்கப் படுகிறது.
சிறந்த வாழ்வாதார விருது என்பது "மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு நடைமுறை அடிப்படையிலான மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை வழங்குபவர்களைக் கௌரவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும்" வழங்கப்படும் ஒரு சர்வதேச விருது ஆகும்.
இந்தப் பரிசானது 1980 ஆம் ஆண்டில் ஜெர்மன்-ஸ்வீடிஷ் கல்விசார் நிதியுதவி வழங்குபவரான ஜாகோப் வான் யுஎக்ஸ் குல் என்பவரால் நிறுவப் பட்டது. இது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வழங்கப் படுகின்றது.
டேவி அமேசானியப் பிரதேசத்தைப் பாதுகாக்க அவரது இன மக்களை 20 ஆண்டு காலமாக வழி நடத்திக் கொண்டுள்ளார்.