பொது விமானப் போக்குவரத்து அமைச்சகமானது இந்திய விமான நிலையங்கள் முழுவதும் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக யாத்ரி சேவா திவாஸ் 2025 முன்னெடுப்பினைத் தொடங்கியது.
இந்த முன்னெடுப்பானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது.
ஸ்வஸ்தா நாரி, சஷக்த் பரிவார் அபியான் உடன் சேர்த்து, இந்த நிகழ்வில் சுகாதார முகாம்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பெண் பயணிகளுக்கான செயல்பாடுகள் இடம் பெற்றன.
2014 ஆம் ஆண்டில் 11 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 25 கோடியாக உயர்ந்தது என்பதோடு இது UDAN போன்ற உள்ளடக்கிய கொள்கைகளால் இயக்கப்படும் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.