2022 ஆம் ஆண்டின் அகில இந்திய யானைகள் மற்றும் புலிகள் கணக்கெடுப்பில் ஒரு புதிய கணக்கெடுப்பு மற்றும் மதிப்பீட்டு நெறிமுறையைப் பின்பற்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
புதிய நெறிமுறைகளின்படி, யானைகள் மற்றும் புலிகளுக்காக வேண்டி ஒரு பொதுக் கணக்கெடுப்பு முறையினை இந்தியா மேற்கொள்ளும்.
தற்போது, புலிகள் கணக்கெடுப்பானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், யானைகள் கணக்கெடுப்பானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மேற்கொள்ளப்படுகின்றன.
சமீபத்தில் வெளியான 2018-19 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2,997 புலிகள் உள்ளன.
சமீபத்தில் 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 29,964 யானைகள் உள்ளன.