யுனெஸ்கோவிடம் இருந்து உலகப் பாரம்பரிய சான்றிதழ் – ஜெய்ப்பூர்
February 9 , 2020
1989 days
620
- ராஜஸ்தானின் சிவப்பு நகரமான ஜெய்ப்பூரானது யுனெஸ்கோ அமைப்பிடமிருந்து உலகப் பாரம்பரிய சான்றிதழைப் பெற்றுள்ளது.
- இந்தச் சான்றிதழை வழங்குவதற்காக யுனெஸ்கோ அமைப்பின் பொது இயக்குநரான ஆட்ரி அசோலே இந்தியாவிற்கு வந்துள்ளார்.
- ஜெய்ப்பூர் ஆனது அங்குள்ள அரண்மனைகள், கட்டிடக்கலை, கோட்டைகள் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்று விளங்குகின்றது.
- இந்த நகரத்தின் கட்டிடக் கலையானது முகலாய, பாரசீக மற்றும் இந்து வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கின்றது.
- இந்த நகரத்தின் கலாச்சாரக் கலவையைப் பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறையும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

Post Views:
620