யுனெஸ்கோவின் ஆபத்து நிலையில் உள்ள பாரம்பரியத் தளங்களின் பட்டியல்
August 4 , 2023 758 days 430 0
மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான இத்தாலிய நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகரம் விரைவில் யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்து நிலையில் உள்ள பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.
யுனெஸ்கோவின் இந்தப் பரிந்துரையானது இத்தாலிய அரசாங்கத்தினை “அதற்கான அதிகளவிலான அர்ப்பணிப்பினை வழங்கச் செய்வதை உறுதி செய்யுமாறு” அழைப்பு விடுக்கிறது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், வெனிஸ் கடுமையான வெள்ளப் பாதிப்பினை எதிர் கொண்டது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த நகரம் ஒரு பெரிய வறட்சி நிலையை எதிர் கொண்டது.
இதற்கிடையில், இந்த நகரமானது ஏற்கனவே சுற்றுலா தொடர்பான சிக்கல்களுடன் போராடி வருகிறது.