யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியல் 2025
May 5 , 2025 200 days 244 0
கர்நாடக மாநிலத்தின் லக்குண்டியில் உள்ள நினைவுச் சின்னங்களின் குழுமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள சில கோயில்கள், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்ப்பதற்காக என்று இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளன.
அவை கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த கல்யாணச் சாளுக்கியர்கள் அல்லது மேற்கு சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டவை.
லக்குண்டி நினைவுச் சின்னக் குழுமத்தில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசி விஸ்வேஸ்வரர் கோயில், மணிகேஸ்வரர் கோயில், நன்னேஸ்வரர் கோயில், பிரம்ம ஜினாலயம் [லக்குண்டியில் உள்ள மிகப் பழமையான கோயில் மற்றும் கி.பி 1007 ஆம் ஆண்டினைச் சேர்ந்தது] மற்றும் முசுகினா பாவி ஆகியவை அடங்கும்.
ஏற்கனவே தற்காலிகப் பட்டியலில் உள்ள பிற பாரம்பரியத் தளங்களில் தக்காண சுல்தானியத்தின் நினைவுச் சின்னங்கள் மற்றும் கோட்டைகள், ஸ்ரீரங்கப்பட்டின தீவு நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹைரே பெங்கல் பெருங்கற்காலத் தளம் மற்றும் பதாமி மற்றும் ஐஹோலே நினைவுச்சின்னக் குழுமம் ஆகியவை அடங்கும்.