யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் 5 புதிய இடங்கள்
October 4 , 2026 2 days 90 0
இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்களின் தற்காலிகப் பட்டியலில் ஐந்து புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
பாக் குகை ஓவியங்கள், சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள கோயில்கள், உதயகிரி குகைகள், கின்னோர்கர் மற்றும் சத்தியாகிரகத் தளங்கள் ஆகியவையே சேர்க்கப் பட்ட ஐந்து இடங்களாகும்.
முதல் நான்கு தளங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன, அதே சமயம் சத்தியாகிரக தளங்கள் என்பது இந்தியா-தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கிடையேயான ஒரு முன் மொழியப் பட்ட வரிசையான தளமாகும்.
உதயகிரி குகைகளில் 20 குடைவரைக் குகைகள், சிற்பங்கள் மற்றும் குப்தர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் (4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி - 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) காணப்படுகின்றன.
பாக் குகைகள் என்பது மேற்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாக்னி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது பௌத்த குடைவரைக் குகைகளாகும், இவை சுவரோவியங்களுக்குப் பெயர் பெற்றவை.
சத்தியாகிரக தளங்கள் மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தின் வளர்ச்சியைக் கண்டறியும் 9 கூறுகளை உள்ளடக்கியது - இதில் 2 தென்னாப்பிரிக்காவிலும் 7 இந்தியாவிலும் உள்ளன.