யுனெஸ்கோவின் தற்காலிக உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியல்
May 22 , 2021 1551 days 596 0
யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சுமார் ஆறு கலாச்சாரப் பாரம்பரியத் தளங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாக மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சரான பிரஹலாத் சிங் பட்டேல் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார்.
அவை,
வாரணாசியின் கங்கை கரை,
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயங்கள்,
மத்தியப் பிரதேசத்திலுள்ள சாத்பூரா புலிகள் காப்பகம்,
மகாராஷ்டிராவின் இராணுவ கட்டிடக் கலை
ஹைர் பெங்கால் (Hire Benkal) பெருங்கற்கால தளம் மத்தியப் பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பெதாகாட் லேமத்தகாட் (Bhedaghat Lametaghat) (இந்தியாவின் மாபெரும் செங்குத்துப் பள்ளதாக்கு)
இத்துடன் யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள மொத்த தளங்களின் எண்ணிக்கையானது 48 ஆக உயர்ந்துள்ளது.