TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் புதிய உத்தேசப் பட்டியலில் உள்ள இடங்கள்

October 23 , 2026 16 hrs 0 min 100 0
  • பராடாங்கின் கார்ஸ்ட்-மண் எரிமலை வளாகம், அந்தமான் கீழமிழ்தல் எரிமலைகள் மற்றும் சிர்பூர் பண்பாட்டு மற்றும் தொல்பொருள் நிலப்பரப்பு ஆகிய மூன்று இந்திய இடங்கள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு) உலக மரபு உத்தேசப் பட்டியலில் சேர்க்கப் பட்டன.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பராடாங் வளாகத்தில் சுண்ணாம்பு குகைகள் மற்றும் ஜல்கி குகைப் பகுதி உட்பட செயலில் உள்ள மண் எரிமலைகள் உள்ளன.
  • அந்தமான் கீழமிழ்தல் எரிமலைகளில் அந்தமான் கடலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான பேரன் தீவு மற்றும் நார்கொண்டாம் தீவு ஆகியவை அடங்கும்.
  • சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள சிர்பூர் என்பது மகாநதி ஆற்றின் வழியே அமைந்துள்ள ஒரு பழங்கால பண்பாட்டு மற்றும் தொல்பொருள் நிலப்பரப்பு ஆகும் என்பதோடு இதில் கி.பி 5 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • உத்தேசப் பட்டியல் என்பது ஒரு இடத்தை யுனெஸ்கோ உலக மரபுப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப் படுவதற்கு முந்தைய முதன்மைப் படியாகும்; இந்தியாவில் தற்போது 45 உலக மரபுத் தளங்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்