யுனெஸ்கோவின் மகத்தான கலாச்சார பாரம்பரிய அமர்வு 2025
December 16 , 2025 5 days 51 0
இந்தியா முதன்முறையாக புது டெல்லியின் செங்கோட்டையில் யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுவின் (IGC) 20வது அமர்வை நடத்தியது.
இந்த அமர்வு என்பது, 2003 ஆம் ஆண்டு மகத்தான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையினை (ICH) இந்தியா அங்கீகரித்ததன் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 08 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த அமர்வின் போது இருபத்தி நான்கு உறுப்பினர் நாடுகள் 67 உயிர்ப்பு மிக்கப் பாரம்பரியக் கூறுகளை ஆய்வு செய்தன.
இவற்றில் அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் ICH பட்டியலில் 11 கூறுகள், மனித குலத்தின் ICH பட்டியலின் பிரதிநிதித்துவப் பட்டியலில் 53 கூறுகள் மற்றும் நல்ல பாதுகாப்பு நடைமுறைகளின் பதிவேட்டில் 1 திட்டம் ஆகியவை அடங்கும்.
அவசரப் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து இரண்டு கூறுகள் பிரதிநிதித்துவப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன என்பதோடுஅவற்றில் முவாசிந்திகா ஆன்மீக நடனம் (கென்யா) மற்றும் டோங் ஹோ நாட்டுப்புற படக்கட்டை அச்சிடுதல் (வியட்நாம்) ஆகியவை அடங்கும்.
ஒன்பது பன்னாட்டுக் கூறுகள் இதில் சேர்க்கப்பட்டன என்பதோடுமேலும் பார்படாஸ், சாட், கொமொரோஸ், எல் சால்வடார், காபோன், லிபியா மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப் ஆகிய ஏழு நாடுகளின் கூறுகள் இதில் முதல் முறையாக சேர்க்கப் பெற்றன.
இந்த சேர்த்தல்களுடன், ஆப்பிரிக்காவின் 13 நாடுகளைச் சேர்ந்த ஒன்பது கூறுகளுடன், 157 நாடுகளைச் சேர்ந்த 849 கலாச்சார நடைமுறைகள் தற்போது யுனெஸ்கோவின் உயிர்ப்பு மிக்க பாரம்பரியமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இங்கு சேர்க்கப்பட்ட குறிப்பிட்ட கூறுகள்:
அமெச்சூர் நாடகக் குழு - செக்கியா
குவார்டெட்டோ இசை - அர்ஜென்டினா
கியூபன் சன் (இசை மற்றும் நடனம்) - கியூபா
ஜோரோபோ - வெனிசுலா
மெவெட் ஓயெங் இசைக் கலை - கேமரூன் மற்றும் காபோன்
புரூசெல்ஸின் ராட் மரியோனெட் நாடகக் குழு - பெல்ஜியம்
பிஷ்ட் நெசவு மற்றும் தொடர்புடைய நடைமுறைகள் - கத்தார், ஈராக், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம்
ஜாஃபா திருமணப் பாரம்பரியம் - ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகள்
கிஃபாட்டா புத்தாண்டு விழா - எத்தியோப்பியா
சீனா (சியாமென்) அடுத்த ICH குழு அமர்வை 2026 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.