யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளம் - செஞ்சிக் கோட்டை
July 15 , 2025 12 days 155 0
இது தற்போது யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளமாக சேர்க்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை மற்றும் 11 கோட்டைகள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது 'கிழக்கின் ட்ராய்' என்று அழைக்கப்படுகிறது.
இது மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாகும், மேலும் இந்த தகுதியைப் பெற்ற ஒரே தமிழக தளம் இதுவாகும்.
பிரான்சின் பாரிசு நகரில் நடைபெற்று வரும் உலகப் பாரம்பரியக் குழுவின் (WHC) 47வது அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளில் பல்வேறு புவியியல் பகுதிகளில் பரவி அமைந்துள்ள 12 கூறுகள் உள்ளன.
மற்ற 11 தளங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன.
இது இராஜகிரி, கிருஷ்ணகிரி மற்றும் சந்திரகிரி ஆகிய மூன்று மலைகளின் மேல் அமைந்துள்ளன.
இது கி.பி 1,200 ஆம் ஆண்டில் கோனார் வம்சத்தைச் சேர்ந்த அனந்த கோன் என்பவரால் கட்டப்பட்டது.
அவரது வாரிசு கி.பி 1,240 ஆம் ஆண்டில் வடக்கு மலையில் கோட்டையமைத்து அதனை கிருஷ்ணகிரி என்று அழைத்தார்.
இது விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், நவாப்கள், பிரெஞ்சுக் காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற பல பேரரசுகளின் வசம் இருந்தது.
செஞ்சி கோட்டையானது 1677 ஆம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி அவர்களால் கைப்பற்றப் பட்டது.
1698 ஆம் ஆண்டில் முகலாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இது மராட்டிய ஆட்சியின் கீழ் இருந்தது.
1714 ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்களால் கைப்பற்றப்படும் வரையில் சிறிது காலம் இராஜா தேசிங் (தேஜ் சிங்) இதை ஆட்சி செய்தார், பின்னர் 1749 ஆம் ஆண்டு வரை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தக் கோட்டையானது 1750 முதல் 1770 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்தது, பின்னர் ஆங்கிலேயர்களின் வசம் சிக்கியது.
11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டையில் ஒரு படிக்கட்டு கிணறு, ஒரு கல்யாண மண்டபம், ஒரு தர்பார், ஒரு நீர் உட்செல்லும் அமைப்பு, ஒரு கடிகாரக் கோபுரம், ஒரு ஆயுதக் கிடங்கு, ஒரு யானை அமைப்புடைய தொட்டி, ஒரு தொழுவம், ஒரு தானியக் கிடங்கு, ஒரு உடற்பயிற்சிக் கூடம், வெங்கடரமண கோயில் மற்றும் சதத்துல்லா மசூதி ஆகியவை உள்ளன.
இந்தக் கோட்டையில் நாயக்கர்கள் மற்றும் நவாப் காலத்தை ஒத்த இரண்டு விரிவான நீர் வழங்கீட்டு அமைப்புகள் இருந்தன.
தமிழ்நாட்டின் மற்ற யுனெஸ்கோ தளங்களாவன, சோழர்கள் கோயில்கள், மாமல்ல புரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை இரயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியனவாகும்.