யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பிராந்தியப் பதிவேட்டின் நினைவகம்
May 19 , 2024 371 days 372 0
ராமசரிதமனாஸ், பஞ்சதந்திரம் மற்றும் சஹ்ருதயலோக-லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கியப் படைப்புகள் ஆனது யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
ராமசரிதமனாஸ், 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்தியப் பக்தி இயக்கக் கவிஞர் துளசிதாஸ் அவர்களால் அவாதி மொழியில் இயற்றப்பட்ட ஒரு காவியக் கவிதை ஆகும்.
காஷ்மீரி மொழி அறிஞர்களான ஆச்சார்யா ஆனந்தவர்தன் மற்றும் அபினவகுப்தா ஆகியோரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சஹ்ரதயலோக-லோகனா, அதன் அழகியல் காரணமாக இப்பட்டியலில் சேர்க்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டது.
யுனெஸ்கோ அமைப்பின் MOW திட்டம் என்பது ஆவணப் பாரம்பரியங்களை, குறிப்பாக அரிதான மற்றும் அருகி வரும் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல் மற்றும் அணுகுதல் மற்றும் பயன்படுத்துவதை பெரும் நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒத்துழைப்பு உத்தி ஆகும்.
UNESCO அமைப்பின் இணைய தளத்தின்படி, 2023 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, சர்வதேச MoW பதிவேட்டில் 494 கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், MoW பதிவேடு பிராந்திய மட்டங்களிலும் செயல்படுகிறது.