யுனெஸ்கோ / குயிலர்மோ கானோ பத்திரிக்கை சுதந்திர விருது 2019
April 22 , 2019 2311 days 694 0
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்களான கியாவ் சோயி ஓ மற்றும் வா லோன் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ / குயிலர்மோ கானோ பத்திரிக்கை சுதந்திர விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதானது வெளிப்படை சுதந்திரத்திற்கான தங்களின் உறுதிப்பாடு, தைரியம் மற்றும் எதிர்ப்பைத் தாங்குதல் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இவர்கள் தற்போது 2017 டிசம்பர் 12 முதல் மியான்மரின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த விருதானது, எத்தியோப்பியாவில் மே 03 ஆம் தேதி உலகப் பத்திரிக்கை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுவதன் ஒரு பகுதியாக மே 02 ஆம் தேதி வழங்கப்படும்.