TNPSC Thervupettagam

யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவு விருதுகள் 2026

September 13 , 2026 9 hrs 0 min 39 0
  • எழுத்தறிவை மேம்படுத்துவதற்கான பங்களிப்பிற்காக ஆறு நாடுகளைச் சேர்ந்த ஆறு எழுத்தறிவு முயற்சிகளுக்கு யுனெஸ்கோ 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச எழுத்தறிவு விருதுகளை வழங்கியது.
  • பன்மொழி மற்றும் தாய்மொழி அடிப்படையிலான எழுத்தறிவை ஊக்குவிப்பதற்காக கொலம்பியா, நெதர்லாந்து மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் முயற்சிகளுக்கு யுனெஸ்கோ கிங் செஜோங் எழுத்தறிவு விருது வழங்கப்பட்டது.
  • இடம்பெயர்ந்த இளைஞர்கள், சமூக எழுத்தறிவு மற்றும் பன்மொழிக் கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக லெபனான், மெக்சிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் முயற்சிகளுக்கு எழுத்தறிவிற்கான யுனெஸ்கோ கன்பூசியஸ் விருது வழங்கப்பட்டது.
  • ஆறு பரிசு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் எழுத்தறிவிற்கான தங்களின் பங்களிப்பிற்காக 30,000 அமெரிக்க டாலர்கள், ஒரு பதக்கம் மற்றும் ஒரு பட்டயத்தைப் பெறுகின்றனர்.
  • இந்த விருதுகள் 1967 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்