TNPSC Thervupettagam

யுனெஸ்கோ- நிகரகுவா விலகல்

May 10 , 2025 20 hrs 0 min 32 0
  • நிகரகுவா நாடானது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது, லா பிரென்சா எனும் நிகரகுவா நாட்டின் செய்தித்தாள் நிறுவனத்திற்கு பத்திரிகைச் சுதந்திரப் பரிசை வழங்கியதையடுத்து இது நிகழ்ந்து உள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆனது, 1997 ஆம் ஆண்டில் உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பரிசை உருவாக்கின.
  • பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரே ஐ.நா. பரிசு இதுவாகும்.
  • முன்னதாக, நிகரகுவா நாடானது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிலிருந்து (FAO) விலகுவதாக அறிவித்தது.
  • மேலும் நிகரகுவா நாடானது ஐ.நா. மனித உரிமைகள் சபை, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியவற்றிலிருந்தும் விலகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்