இந்தியாவின் தீபங்களின் திருவிழாவான தீபாவளியானது 2025 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
பண்டிகைகள், சடங்குகள், கலைகள் மற்றும் சமூக நடைமுறைகள் போன்ற உயிர்ப்புள்ள கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதே இந்தப் பட்டியலின் நோக்கமாகும்.
தீபாவளி ஆனது அதன் நீண்டகாலச் சடங்குகள், சமூக கொண்டாட்டங்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் தீபங்களை ஏற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு பட்டியலில் பைக்குழல் இசைக் கருவி/பேக் பைப் வாசித்தல் (பல்கேரியா), குவார்டெட்டோ இசை (அர்ஜென்டினா) மற்றும் கிறிஸ்துமஸ் பிராம் மற்றும் சம்பை (பெலிஸ்) போன்ற 20 கூறுகள் உள்ளன.
இந்தியாவில் துர்கா பூஜை, கும்பமேளா, வேத மந்திரங்கள், இராம லீலை, குடியாட்டம் மற்றும் கல்பெலியா நடனம் ஆகியவை முன்னதாக இப்பட்டியலில் இடம் பெற்றன.