மாநிலத்தில் யுரேனியச் சுரங்கம் அமைப்பதற்கும் யுரேனியம் தாது பதப்படுத்தும் வசதிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து மேகாலயா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேகாலயா முதலமைச்சர் 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் நிலம் மற்றும் அதன் அடியில் உள்ள கனிமங்கள் மீது தனியார் மற்றும் சமூக நில உரிமையாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டுள்ளது.
மேகாலயாவின் ஆறாவது அட்டவணை கட்டமைப்பானது நிலம் மற்றும் வளங்களின் மீதான சமூகம், குலம் மற்றும் தனிநபர் உரிமையைப் பாதுகாக்கிறது.
மேகாலயாவில் சுமார் 9.22 மில்லியன் டன் யுரேனியம் படிவுகள் உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளதுடன் இது இந்தியாவின் மொத்த இருப்பில் சுமார் 16% ஆகும், மேலும் இது ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.