TNPSC Thervupettagam

யூஃப்லிக்டிஸ் ஜலதாரா

February 27 , 2022 1401 days 614 0
  • புனேயிலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பானது ஒரு புதிய தவளை இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
  • இவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் பரவியுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள நன்னீர் பகுதிகளில் வளர்கின்றன.
  • இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பு, புவனேஷ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவிலுள்ள கார்மல் மவுன்ட் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து இதனைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தத் தவளையின் பொதுப் பெயர் ஜலதாரா நீர் தத்தி தவளை மற்றும் இதன் அறிவியல் பெயர் யூஃப்லிக்டிஸ் ஜலதாரா என்பதாகும்.
  • இந்தத் தவளையானது முதன்முதலில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள தட்டேகாட் என்ற பறவைகள் சரணாலயத்தின் அருகிலுள்ள நன்னீர் நிலைகளில் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்