TNPSC Thervupettagam

யூரியா தற்சார்பு - NIPU-2026

July 20 , 2026 7 days 94 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (CCEA) தற்சார்பு இந்தியாவுக்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கைக்கு (NIPU-2026) ஒப்புதல் அளித்துள்ளது.
  • 8-9 இயற்கை எரிவாயு அடிப்படையிலான யூரியா ஆலைகளை அமைப்பதன் மூலம் உள்நாட்டு யூரியா உற்பத்தித் திறனை 10 மில்லியன் டன்கள் உயர்த்துவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது புதிய முதலீட்டுக் கொள்கை (NIP)-2012-ஐ மாற்றுகிறது, அதன் முதலீட்டு காலம் 2019 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
  • இக்கொள்கை 12%-16% பங்கு மீதான வருவாயை (RoE) உறுதி செய்கிறது, நிலையான மற்றும் மாறுபடும் மானியச் செலவுகளைப் பிரிக்கிறது, மேலும் அந்நியச் செலாவணி அபாயங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்கிறது.
  • இது யூரியா இறக்குமதியைக் குறைக்கவும், தற்சார்பை மேம்படுத்தவும், உரத் துறையில் பொது மற்றும் தனியார் முதலீட்டை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • புதிய முதலீட்டுக் கொள்கை (NIP)-2012 உடன் ஒப்பிடுகையில், இக்கொள்கையின் மூலம் ஒவ்வொரு ஆலைக்கும் ₹250 கோடிக்கு மேல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்