ரயில் பயணங்களின் போது பயணிகளின் குறைகளை விரைவாகக் களைவது மற்றும் விசாரணைகளை விரைவாக மேற்கொள்வது ஆகியவற்றிற்காக இந்திய ரயில்வே நிறுவனம் 139 என்ற ஒரு ஒருங்கிணைந்த உதவி மைய எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ஏற்கனவே இருக்கும் உதவி மைய எண்களின் ஒருங்கிணைந்த வடிவமாகும் (குறிப்பாக 182 தவிர). இது பல உதவி மைய எண்களின் காலதாமதத்தைத் தவிர்க்கவும் ரயில் பயணத்தின் போது பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும் அவர்களை ரயில்வேயுடன் இணைக்கவும் வழிவகை செய்கின்றது.
இந்த உதவி மைய எண் ஆனது 12 மொழிகளில் செயல்பட இருக்கின்றது.
இது ஒரு ஊடாடும் குரல் எதிர்வினை (பதிலெதிர்ப்பு) முறையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இதனைப் பொதுவான புகார்கள், விபத்துக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம்.