இந்திய ரயில்வேவானது மின்னணு முறையிலான அலுவலகம் என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையைச் செயல்படுத்தும் பொருட்டு மினி ரத்னா பிரிவைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமான ரெயில்டெல் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மின்னணு முறையிலான அலுவலக அமைப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த கோப்பு மேலாண்மை அமைப்பாகும். இது கோப்புகளின் தரவு, உள்ளடக்கம் ஆகியவற்றை மின்னணு முறையில் நிர்வகிக்க ஊழியர்களுக்கு உதவ இருக்கின்றது.
மின்னணு முறையிலான அலுவலக அமைப்பானது காகிதமற்ற கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது செயல்பாட்டுச் செலவைக் குறைக்க உதவுவதோடு கார்பன் அடிச்சுவட்டையும் குறைக்க உதவ இருக்கின்றது.
இது தேசியத் தகவல் மையத்தினால் (National Informatics Centre - NIC) செயல்படுத்தப்பட இருக்கின்றது.
தெற்கு மத்திய ரயில்வே மற்றும் பாரத வங்கி ஆகியவை இந்தியாவில் உள்ள 585 ரயில் நிலையங்களில் வங்கிச் சேவையைச் செயல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் செயல்பட இருக்கும் இந்த வங்கிச் சேவையானது அனைத்து ரயில் நிலையங்களிலும் சீரான முறையில் பணம் அனுப்பும் வசதியை வழங்க இருக்கின்றது.
NIC
தேசியத் தகவல் மையமானது 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
இது அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதற்காகவும் டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சிகளை வழங்குவதற்காகவும் உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கின்றது.