ரயில் தடம் புரளல் பற்றிய இந்திய ரயில்வேயின் அறிக்கை
June 8 , 2023 802 days 424 0
இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) 2022 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் ரயில்கள் தடம் புரளல் என்பது குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளார்.
மொத்தம் 422 ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்களுக்குப் பொறியியல் துறையே ஒரு காரணமாக உள்ளது.
16 இரயில்வே மண்டலங்களில் (ZRs) ரயில்கள் தடம் புரண்ட விபத்துகள் பற்றிய 1129 ‘விசாரணை அறிக்கைகளின்’ பகுப்பாய்வின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகள் / விபத்துகளில் ரயில்கள் தடம் புரண்டதற்குக் காரணமாக 24 காரணிகள் உள்ளதை இது வெளிப்படுத்தி உள்ளது.
ரயில் விபத்துகளால் ஏற்பட்ட மொத்தச் சேதம்/சொத்து இழப்பு 32.96 கோடி ருபாய் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இவற்றில் 182 ரயில்கள் தடம் புரண்டதற்கு இயந்திரவியல் துறையின் பிழைகளும் 154 விபத்துகள் என்ஜின் ஓட்டுனர்களின் கவனக் குறைவுகளும் காரணமாக இருந்துள்ளது.
2017-21 ஆம் ஆண்டில் 1127 ரயில்கள் தடம் புரண்டதில், சுமார் 289 தடம் புரளல்கள் (26%) ரயில்வே தடங்களைப் புதுப்பிக்காமையால் நிகழந்தவை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.