TNPSC Thervupettagam

ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி 2026

May 9 , 2026 16 hrs 0 min 25 0
  • ரவீந்திரநாத் தாகூரின் 165-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு மே 7 அன்று ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாளானது வங்காள நாட் காட்டியின் போயிஷாக் மாதத்தின் 25-வது நாளுக்கு (பொசிஷே போயிஷாக்) இணை ஆகும்.
  • இது 1861 ஆம் ஆண்டு மே 7 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்த ரவீந்திரநாத் தாகூரின் பிறப்பை நினைவு கூருகிறது.
  • அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, ஓவியர், இசைக்கலைஞர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
  • 'கீதாஞ்சலி' படைப்பிற்காக 1913-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஐரோப்பியர் அல்லாதவர் இவரே ஆவார்.
  • அவர் ரவீந்திர சங்கீதம் எனப்படும் 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார்; மேலும் வங்காள இலக்கியம் மற்றும் இசையை நவீனப்படுத்தினார்.
  • அவர் இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன'-வை எழுதியதோடு  வங்காளதேசத்தின் தேசிய கீதத்திற்கும் அவர் உந்துதலாக இருந்தார்.
  • அவர் முழுமையான கல்வி மற்றும் கலாச்சாரக் கற்றலை மேம்படுத்துவதற்காக 1921-ஆம் ஆண்டில் சாந்திநிகேதனில் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்