ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகள்
April 13 , 2024 490 days 389 0
சீன நாடானது, கடல் வழிகள் மூலம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை மிகவும் பெரும்பான்மையாக இறக்குமதி செய்யும் ஒரு நாடாக உருவெடுத்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
மார்ச் மாதத்தில், சீனா ரஷ்யாவின் கச்சா எண்ணெயை ஒரு நாளைக்கு 1.82 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற அளவில் கடல் வழியாக இறக்குமதி செய்த நிலைமையில், இது இந்தியாவின் ஒரு நாளைக்கு 1.36 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற இந்தியாவின் இறக்குமதி அளவினை விஞ்சியது.
கூடுதலாக, சீனா குழாய்கள் மூலமும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயைப் பெறுகிறது.
இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சமீபத்திய மந்த நிலைக்கு பல்வேறு தடைகள் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியானது ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளின் இறக்குமதியை மிஞ்சியுள்ளன.