இந்திய அரசானது, ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் மற்றும் கசானில் இரண்டு புதிய தூதரகங்களைத் துவக்கியுள்ளது.
இது வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யெகாடெரின்பர்க் கனரக பொறியியல், இரத்தினக் கல் உருவாக்கம், பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி, உலோகம், அணு சக்தி சார் எரிபொருள், இரசாயனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பெயர் பெற்ற ஒரு தொழில்துறை மையமாகும்.
கசான் எண்ணெய் உற்பத்தி, உரங்கள், வாகனப் பாகங்கள், பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி, மருந்துகள் மற்றும் மின்சார உபகரணங்களுக்குப் பெயர் பெற்றது.
தூதரக அதிகார வரம்புகளின் கீழ் கசானில் சுமார் 7,000 இந்தியர்களும், யெகாடெரின்பர்க்கில் 3,000 இந்தியர்களும் வாழ்கின்றனர்.