1987 ஆம் ஆண்டு நடுத்தர தூர தாக்குதல் வரம்புடைய அணுசக்திப் படைகள் (INF) ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கா டைஃபோன் எறிகணை அமைப்பை நிலை நிறுத்தியதும், ரஷ்ய கடற்கரைகளுக்கு அருகில் இரண்டு அணு ஆயுதத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை மீண்டும் நிலைப்படுத்தியதும் இதற்காக குறிப்பிடப் பட்ட காரணங்கள் ஆகும்.
INF ஒப்பந்தம் ஆனது 1987 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையில் கையெழுத்தானது.
இது 500 முதல் 5,500 கிமீ வரையிலான தாக்குதல் வரம்புகளைக் கொண்ட நிலத்தில் இருந்து ஏவப்படும் உந்துவிசை மற்றும் சீர்வேக எறிகணைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அகற்றுவதற்கான முதல் பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும், மேலும் இது களம்சார் ஆய்வுகளையும் உள்ளடக்கியது.
2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிகாரப் பூர்வமாக விலகியதும் இந்த ஒப்பந்தம் பலவீனமடைந்து விட்டது.