TNPSC Thervupettagam

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடி ஐ.நா.பாதுகாப்புச் சபையின் வரைவுத் தீர்மானம்

February 28 , 2022 1360 days 543 0
  • உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் (அமெரிக்காவின் ஆதரவுப் பெற்ற) இருந்து இந்தியா விலகிக் கொண்டது.
  • கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி விவாதம் என்று கூறிய இந்தியா, இராஜதந்திர உத்திகள் கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.
  • பிப்ரவரி மாதத்திற்கான தலைமைத்துவத்தை வகிக்கும் ரஷ்யா, இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கித் தீர்மானத்தினை நிராகரித்தது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் வாக்களிக்கவில்லை.
  • இந்த தீர்மானத்தை ரஷ்யா நிராகரித்ததால், பிற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்