ராஜீவ் மெஹரிஷி - உலக சுகாதார அமைப்பின் அயலகக் கணக்குத் தணிக்கையாளர்
December 7 , 2019 2059 days 719 0
2020 முதல் 2023 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO - World Health Organization) அயலகக் கணக்குத் தணிக்கையாளராக இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், ராஜீவ் மெஹரிஷி (Comptroller and Auditor General of India - CAG) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் நடத்தப்பட்ட 72வது உலக சுகாதார சபையில் இவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டில் CAGக்கான இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச கணக்குத் தணிக்கைப் பணி இதுவாகும்.
மேலும் இவர் ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அயலகக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.