2026 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அல்டாப்ரா பவளத்தீவில் 180,000–183,000 அல்டாப்ரா ராட்சத ஆமைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளதோடு இது சீஷெல்ஸின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
சீஷெல்ஸ் தீவுகள் அறக்கட்டளை மற்றும் எக்ஸிடெர் பல்கலைக்கழகம் இணைந்து, 2018-2022 ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை நடத்தின.
அல்டாப்ரா ராட்சத ஆமை (அல்டாப்ராசெலிஸ் ஜிகாண்டியா) மேற்கு இந்தியப் பெருங் கடலில் உள்ள பவளத்தீவான அல்டாப்ரா பவளத்தீவை பூர்வீகமாகக் கொண்டது.
அல்டாப்ரா பவளத்தீவு 1981 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான இயற்கை இருப்புப் பகுதியாகவும், 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகவும் மாறியது.
19 ஆம் நூற்றாண்டில் அதன் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக சரிந்தது, ஆனால் பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக மீண்டு வந்தது; வறட்சி, கடல் மட்ட உயர்வு மற்றும் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவை இதற்கு அச்சுறுத்தல்களாகும்.