திபெத்திய பௌத்த மதத்தினைச் சார்ந்த அமெரிக்க அறிஞரான ராபர்ட் ஏ.எஃப். தர்மன் (1941-2026), அமெரிக்காவில் தனது 84வது வயதில் காலமானார்.
இவர் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் மற்றும் திபெத்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த போதனைகளை ஊக்குவிக்கும் Tibet House US அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.
அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பௌத்த மதத்தைத் தழுவியதோடு தலாய் லாமாவின் வழிகாட்டுதலின் கீழ் பௌத்த துறவியானார்.
பௌத்த துறவியாக மூன்று ஆண்டுகள் கழித்த அவர், பின்னர் மேற்கத்திய உலகில் திபெத்திய பௌத்த மதத்தின் முதன்மையான உரையாசிரியர்களில் ஒருவராக மாறினார்.
இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் 'இன்னர் ரெவொல்யூஷன்', 'இன்பினிட் லைஃப்' மற்றும் 'தி ஹோலி டீச்சிங் ஆஃப் விமலகீர்த்தி' ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு ஆகியவை அடங்கும்.