பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது 2022-23 ஆம் ஆண்டிற்கான ராபி பயிர்களின் சந்தைப் படுத்துதல் பருவத்திற்கான அனைத்துக் கட்டாய ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசானது விவசாயிகளிடமிருந்துத் தானியங்களைக் கொள்முதல் செய்யும் ஒரு விலை விகிதமாகும்.
தற்போது, காரிப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட 23 வகை பயிர்களுக்கு இது குறைந்த பட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கிறது.
இது விவசாயிகளின் உற்பத்திச் செலவில் குறைந்தது ஒன்றரை மடங்கு என்ற கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டது.
2019-19 ஆம் ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி விலையில் 1.5 என்ற அளவில் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.
வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஆண்டிற்கு 2 முறை நிர்ணயிக்கப் படுகிறது.