அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளையானது “ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை” என்று பெயரிடப்பட இருக்கின்றது.
இந்திய உச்ச நீதிமன்றமானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 09 அன்று வழங்கப்பட்ட தனது தீர்ப்பில் 90 நாட்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையானது 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறுவார்.
அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞரும் மூத்த வழக்குரைஞருமான K. பராசரன் இந்த அறக்கட்டளையின் தலைவராகப் பணியாற்ற இருக்கின்றார்.