பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவத்திற்கான விருதுகள் - ராம்நாத் கோயங்கா
January 6 , 2019 2475 days 837 0
பத்திரிக்கைத் துறையில் ராம்நாத் கோயங்கா நிபுணத்துவ விருதுகளின் 13-வது பதிப்பு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
2017ம் ஆண்டிற்கான அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் சிறந்த நிபுணத்துவத்திற்கான விருதுகளை 18 பிரிவுகளில் 29 வெற்றியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் வழங்கினார்.
2005 ஆம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவம் என்ற விருதுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்படுத்தியது.
இந்த விருது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள்
ஊடகம்
விருதின் பிரிவுகள்
காரணம்
M. குணசேகரன்
நியூஸ் 18
பிராந்திய மொழிகள்
ஓக்கி சூறாவளியின் போது மீனவர்கள் மீதான அவரது அறிக்கைக்காக.
விஜய் குமார் S
தி இந்து
விசாரணை அறிக்கைப் பிரிவு
தமிழ்நாடு குட்கா ஊழலில் எவ்வாறு வரி செலுத்துபவர் அதிகாரிகளை எவ்வாறு பணம் கொடுத்து சரிகட்டினர் என்பது தொடர்பான அவரது அறிக்கைகளுக்காக.
சந்தியா ரவிசங்கர்
The wire.in
சுற்றுப்புறச் சூழல் மீதான அறிக்கைப் பிரிவு
தமிழ்நாட்டில் சட்ட விரோதமான கடற்கரை மணற் சுரங்கம் மீதான அவரது விசாரணை அறிக்கைகளுக்காக