ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவின் 10வது பதிப்பு சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் கலாச்சார அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், ஓவியம், சிற்பம் மற்றும் நிகழ்த்துக் கலைகள்-நாட்டுப்புற, பழங்குடி, செம்மொழி மற்றும் தற்காலக் கலைகள் போன்ற நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை ஒரே இடத்தில் பல்வேறு பரிமாணங்களில் காண்பிப்பதற்காக இது 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இது 22 மாநிலங்களில் இருந்து வரும் நாட்டுப்புற-கலைப் படைப்புகளின் மிகுதியை உள்ளடக்கியதாக அமையும்.
இது மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் “ஒரே பாரதம்- வளமான பாரதம்” என்ற முயற்சியின் கீழ் தொடங்கப்பட்டது.
ஒரே பாரதம்- வளமான பாரதம் ஆனது பல்வேறு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்களிடையே பிணைப்பை மேம்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அத்திட்டம் பாதுகாக்க முனைந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் மக்களிடையே கலாச்சாரப் பகிர்வினை மேற்கொள்ள மற்றொரு மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்துடன் ஒன்றொடொன்று இணைக்கப் படும்.