TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் மாநில நிதிநிலை அறிக்கை - புதிய தகவல்கள்

February 3 , 2026 12 days 108 0
  • அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகியவை 2021 முதல் தங்கள் கடனைத் தொடர்ந்து 4 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்துள்ளன.
  • இந்த மாநிலங்கள், வளர்ச்சிச் செலவினங்களைத் தக்கவைத்துக்கொண்டே, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) இருந்து நிலுவையில் உள்ள கடன்களின் பங்கை குறைத்துள்ளன, இது நலத்திட்டங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் நிதி ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதைக் காட்டுகிறது.
  • 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலையறிக்கை மதிப்பீடுகளின்படி, மேற்கு வங்காளம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 39% என்ற அளவில் அதிகபட்ச கடன் பங்கைக் கொண்டுள்ளது.
  • கேரளா தனது நிலுவையில் உள்ள கடன்களை 4.8 சதவீதப் புள்ளிகள் குறைத்து, தனது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மதிப்பிடப்பட்ட 35.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
  • தமிழ்நாட்டின் கடன், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 29.2 சதவீதமாக இருந்தது.
  • அசாம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதமும், ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி 2025-26 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவீதமும் கடனாகக் கொண்டிருந்தன.
  • மாநிலங்கள் தங்கள் பொருளாதாரங்களின் அளவுடன் ஒப்பிடுகையில் கடனின் பங்கை குறைத்திருந்தாலும், அந்த விகிதம் FRBM சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட 20% வரம்பிற்கு மேலேயே நீடிக்கிறது.
  • ஐந்து மாநிலங்களிலும் சமூகநலத் துறை மற்றும் மூலதனச் செலவினம் ஓரளவு குறைந்தன அல்லது ஒட்டு மொத்த எண்ணிக்கையை விடத் தொடர்ச்சியாகக் குறைவாகவே இருந்தன.
  • வருவாய்க் கணக்கு, மூலதனச் செலவினம் மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் தொடர்பான அனைத்துச் செலவினங்களும் சமூகநலச் சேவைகள், பொருளாதாரச் சேவைகள் மற்றும் பொதுச் சேவைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
  • சமூகநல மற்றும் பொருளாதாரச் சேவைகளானது மேம்பாட்டுச் செலவினங்களை உருவாக்கும் அதே வேளையில், பொதுச் சேவைகளுக்கான செலவினம் மேம்பாடு சாரா செலவினமாகக் கருதப்படுகிறது.
  • குறைந்து வயது மக்களைக் கொண்ட மாநிலங்கள் மனித மூலதன முதலீடுகளை வலுப்படுத்துவதன் மூலம் தங்கள் மக்கள்தொகை ஈவுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இடைநிலை மாநிலங்கள் வளர்ச்சி முன்னுரிமைகளை வயதானவர்களுக்கு முன்கூட்டியே தயார்படுத்துவதன் மூலம் சமநிலைப்படுத்தலாம், மேலும் வயதான மக்களைக் கொண்ட மாநிலங்கள் சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் பணியாளர் கொள்கை சீர்திருத்தங்களுடன் வருவாய் திறனை மேம்படுத்தலாம்.
  • கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்