ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புதிய ஊடலை அமைப்பு
January 9 , 2025 226 days 245 0
ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது அதன் அதிநவீன குறைந்த ஆற்றல் நுகர்விலான AWaDH ஊடலை நுழைவாயில் மற்றும் பிணைய அமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தச் செலவினம் மிக குறைந்த முதல்-வகையான அமைப்பு ஆனது ஊடலை மூலம் இயக்கப் பட்ட உணர்விகளை மேகக் கணினி இயங்குதளங்களுடன் இணைக்கிறது.
இது வேளாண்மை, தளவாடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நெகிழ்திறன் போன்ற பல் துறைகளில் தடையற்றத் தரவுப் பரிமாற்றம், நிகழ்நேரச் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளை வழங்குகிறது.
இது ஒரு நேர்க்கோட்டு (LOS) அமைப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் வரையிலான தரவுப் பரிமாற்றத்தை மேற்கொள்ள உதவுகிறது.